கிளி. கண்டாவளை கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான செயலமர்வு!

#SriLanka #Kilinochchi #children #Development
Soruban
1 year ago
கிளி. கண்டாவளை கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான செயலமர்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு நேற்று(23-07-2025) நடைபெற்றது. குறித்த நிகழ்வு World Vision(வேள்ட் விஷன்) நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இ.நளாஜினி மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் வளவாளராக கிளிநொச்சி மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.ஜெயக்கணேஸ் மற்றும் World Vision நிறுவனத்தின் கரைச்சி, கண்டாவளை பிரதேச திட்ட முகாமையாளர் மக்டலின் குயிண்டஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது செயற்றிட்டம் தயாரித்தல், சிறுவர் பிரச்சினைகள் ஆபத்துக்கள் தொடர்பான வரைபடம் தயாரித்தல், எதிர்கால திட்டமிடல்கள், அறிக்கையிடல் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களிற்கு பாரப்படுத்தல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

மேலும் செயலமர்வின் இறுதியில் கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கள் இச் செயலமர்வின் விடயங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் படிவங்கள் மற்றும் காகிதாதிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த செயலர்வில் World Vision நிறுவன உத்தியோகத்தர்கள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை சேர்ந்த கிராம் அலுவலர்கள், பொருளாதார அபிவிருந்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்பினர் உட்பட உறுப்பினர்கள், கிராமிய சிறுவர் அபிருத்திக் குழு அங்கத்தவர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

World Vision நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சிறுவர் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753481845.jpg



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4