நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
