சுவிற்சர்லாந்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று சடலங்கள் - குற்றவாளி கைது
#Arrest
#Switzerland
#Murder
#House
Prasu
3 months ago
சுவிற்சர்லாந்தின் நியூசாடெல் கன்டோனில், கோர்செல்லஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட நிலையில், மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை தொடர்பாக காவல்துறையினரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்வதற்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் அவர் காயமடைந்தார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விரிவான பொலிஸ் நடவடிக்கை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஒரு வீதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
