வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்! கொழுப்பில் மாபெரும் போராட்டம்
வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த கோரி கொழும்பில் நாளை போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
நாடாளுமன்றச் சுற்று வட்டத்தில் நாளை காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது, முன்னிலையாக வேண்டும் எனவும், விசாரணை விடயங்கள் தொடர்பில் வெளியில் கூறக் கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தியே குமணன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
