செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

#SriLanka #Semmani human burial
Mayoorikka
10 months ago
செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

  செவ்வாய்க்கிழமை அகழ்வாய்வு தளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் போது புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 03 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

 அதேவேளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகளில் 08 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 

இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதியுடன் 158 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரையில் 169 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4