பிரான்சில் 16 வயது சிறுவனை கொலை செய்த 13 வயது சிறுவன்
#Death
#Arrest
#Switzerland
#Murder
#Attack
#Knife
Prasu
3 months ago
16 வயதுடைய சிறுவன் ஒருவர் கத்தியால் பல துண்டுகளாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தத்தை உறையவைக்கும் இச்சம்பவத்தை மேற்கொண்டது 13 வயதுடைய சிறுவன் ஒருவன் என தெரியவந்துள்ளது.
லியோன் நகரின் புறநகப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், இரு நண்பர்களுடன் Caluire-et-Cuire நகர்ப்பகுதியில் நின்றிருந்த போது அவர்களை நெருங்கிய குறித்த 13 வயதுச் சிறுவன், கத்தி ஒன்றினால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
பல இடங்களில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலாளியின் நோக்கம் குறித்து அறிய முடியவில்லை. தப்பி ஓடி தலைமறைவான சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
