ஒரு தசாப்பதத்திற்கு பின் இலங்கைக்கு வருகை தரும் இத்தாலிய பிரதி அமைச்சர்!

#SriLanka #Italy #Visit #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
10 months ago
ஒரு தசாப்பதத்திற்கு பின் இலங்கைக்கு வருகை தரும் இத்தாலிய பிரதி அமைச்சர்!

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi),உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

அவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

இவ்விஜயமானது, சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாக இது கருதப்படுகின்றது. 

தமது விஜயத்தின் போது, ​​பிரதி அமைச்சர் த்ரிபோடி, இலங்கை-இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் தொடக்க அமர்வில், வௌிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணை தலைமை தாங்கவுள்ளார். 

இவ்விஜயத்தின் போது அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4