வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள்; ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு

#SriLanka #Sri Lanka President #Mullaitivu
Mayoorikka
10 months ago
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள்; ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் இன்று நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

 நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று(02) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து காலை புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில் நண்பகல் 1 மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். 

 மிகநீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க வந்த ஜனாதிபதியை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் வரவேற்றிருந்தார். தொடர்ந்து பால நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். 

 இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திர சேகரம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4