கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பலனின்றி குடும்பப் பெண் உயிரிழப்பு!
#SriLanka
#Police
#Accident
#Kilinochchi
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
3 months ago
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய மோகனபவன் வனிதா என்ற குடும்பப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த 09.09.2025 அன்று வைத்தியசாலை செல்வதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, திடீரென ஏற்பட்ட சுகையீனத்தினால் அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி 11.09.2025 அன்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
