யாழில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Death #baby
Mayoorikka
10 months ago
யாழில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!

யாழில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

 நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியை சேர்ந்த கவிநாத் பூஜிதா என்ற தம்பதிகளின் முதல் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. 

 பிறந்து நான்கு நாட்களின் பின்னர் குழந்தை நேற்றையதினம் (11) திடீரென உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

 சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தமது முதல் குழந்தை பிறந்து 4 நாட்களில் உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4