உலகின் முதல் AI அமைச்சரை நியமித்த அல்பேனியா
#government
#Minister
#technology
#Ministry
#AI
#Albania
Prasu
3 months ago
உலகில் முதல் முறையாக அல்பேனியா நாடு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சரை நியமித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டு அமைச்சரவையில் ஊழல் தடுப்புத் துறை அமைச்சராக ஏஐ நியமிக்கப்பட்டதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா நேற்று அறிவித்தார்.
'சூரியன்' என்று பொருள்படும் 'டியெல்லா' என்று அந்த ஏஐ அமைச்சருக்கு பெயரிடப்பட்டுள்ளது. டியெல்லா, 100 சதவீத ஊழல் இன்றியும் விரைவாகவும் வெளிப்படையாகவும் அரசு ஒப்பந்தங்களை கையாள உதவும் என்று பிரதமா் எடி ராமா தெரிவித்தார்.
1990 இல் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சிக்கு பிறகு அல்பேனியாவில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. டியெல்லாவின் வருகை மக்களுக்கு நம்பிக்கையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
