கடந்த ஆட்சியின்போது ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது - ஹரிணி!

#SriLanka #ADDA #Harini Amarasooriya #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
10 months ago
கடந்த ஆட்சியின்போது ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது - ஹரிணி!

கடந்த ஆட்சியின்போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அதனை இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டுவர முடிந்தது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

 கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14) நடைபெற்ற மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். 

 இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4