வான் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்து! பெண் ஒருவர் உயிரிழப்பு 3 சிறுவர்களுக்கு காயம்

#SriLanka #Accident #Lanka4
Mayoorikka
10 months ago
வான் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்து! பெண் ஒருவர் உயிரிழப்பு 3 சிறுவர்களுக்கு காயம்

தெற்கு அதிவேக வீதியில் வான் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 தெற்கு அதிவேக வீதியில் களனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

 காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 குறித்த விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று சிறுவர்கள் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4