கனேடிய எல்லையில் உறைந்து உயிரிழந்த குடும்பம் - நாடு கடத்த உதவிய நபர் கைது

#Death #Arrest #Canada #America #family #Border
Prasu
9 months ago
கனேடிய எல்லையில் உறைந்து உயிரிழந்த குடும்பம் - நாடு கடத்த உதவிய நபர் கைது

2022ம் ஆண்டு கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடும் குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்நிலையில், அந்தக் குடும்பத்தை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய நபர்களில் மற்றொருவர் தற்போது கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள டிங்குச்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது பரிதாபமாக உயிரிழந்தது.

images/content-image/1758009202.jpg

அந்தக் குடும்பத்தை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்த உதவியவர்களில் ஒருவர் பெனில் படேல் என்பவர் ஆவார். அந்த சம்பவம் தொடர்பில் இந்த நபர் மீது இந்தியாவிலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெனில் படேல் ரொரன்றோ புறநகர்ப்பகுதியில் வாழ்ந்துவருவதும், தன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, குடும்பத்துடன் வெளியே செல்வது என சாதாரணமான வாழ்ந்துவருவதும் தெரியவந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையின்பேரில் Fenil Patel கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4