Fiber இணையத்தை தடை செய்த தலிபான்
#Afghanistan
#Taliban
#Banned
#Internet
Prasu
3 months ago
ஆப்கானிஸ்தானில் ஃபைபர் ஆப்டிக் இணையத்தை தலிபான் தலைவர் தடை செய்ததாக நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இதுபோன்ற தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
புதிய சட்டத்தை தொடர்ந்து வடக்கு பால்க் மாகாணத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் துறை, பொது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வைஃபை இணையம் இல்லாமல் உள்ளது.
இருப்பினும், மொபைல் இணையம் செயல்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
“ஒழுக்கக்கேட்டைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேலும் தேவைகளுக்காக நாட்டிற்குள் ஒரு மாற்று தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )