வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? செப்டம்பர் 19 (September 19)

#people #history #Lanka4 #World
Prasu
9 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? செப்டம்பர் 19 (September 19)

செப்டம்பர் 19 (September 19) கிரிகோரியன் ஆண்டின் 262 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 263 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 103 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்


  • 634 – ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில் தமாசுக்கசு நகரை பைசாந்தியரிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1356 – இங்கிலாந்து எட்வர்ட் தலைமையில் "போய்ட்டியேர்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்று, இரண்டாம் யோன் மன்னரைக் கைது செய்தது.
  • 1658 – யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.[1]
  • 1676 – வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது.
  • 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சரட்டோகா சண்டைகள்: பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையினரை பெரும் சேதங்களுடன் வென்றன.
  • 1778 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • 1799 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பேர்கன் போரில் பிரெஞ்சு-இடச்சுப் படைகள் உருசிய, பிரித்தானியப் படைகளை வென்றன.
  • 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் மிசிசிப்பியில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினரத் தோற்கடித்தனர்.
  • 1868 – எசுப்பானியாவில் "புகழ் வாய்ந்த" புரட்சி ஆரம்பமானது. புரட்சியின் முடிவில் இரண்டாம் இசபெல்லா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 1870 – பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிசு நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் நான்கு மாதத்தின் பின் புருசியாவிடம் வீழ்ந்தது.
  • 1881 – சூலை 2-இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.
  • 1893 – உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • 1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
  • 1916 – முதலாம் உலகப் போர்: கிழக்கு ஆப்பிரிக்க நடவடிக்கையில், பெல்ஜிய கொங்கோவின் குடியேற்றப் படைகள் டபோரா நகரைப் பெரும் சண்டையின் பின் கைப்பற்றின.
  • 1939 – இரண்டாம் உலகப் போர்: கேப்பா ஒக்சீவ்சுக்கா சமரில் போலந்து போரில் ஈடுபட்ட தனது 75% படையினரை இழந்தது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: ஊர்ட்கென் காடு சண்டை ஆரம்பமானது.
  • 1944 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • 1952 – ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட சார்லி சாப்ளின் நாடு திரும்புவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.
  • 1957 – ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.
  • 1970 – கிரேக்க சர்வாதிகாரி ஜியார்ஜியசு பப்படபவுலசின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரேக்க மாணவர் ஒருவர் தீக்குளித்து மாண்டார்.
  • 1976 – தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் அனைத்து 154 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1978 – சொலமன் தீவுகள் ஐநாவில் இணைந்தது.
  • 1983 – செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1985 – மெக்சிகோ நகரில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் உயிரிழந்தனர்.
  • 1989 – நைஜரில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததில் அனைத்து 171 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1991 – ஏட்சி பனிமனிதன் இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.
  • 1997 – அல்ஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.
  • 2006 – தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • 2014 – இலங்கையின் வடக்கே வேலணையில் நான்கு இடங்களில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன
  • 2017 – மெக்சிக்கோவில் நடுப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 370 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்


  • 1749 – சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1822)
  • 1759 – வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (இ. 1850)
  • 1886 – பாசல் அலி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (இ. 1959)
  • 1911 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1993)
  • 1921 – பாவ்லோ பிரையர், பிரேசில் மெய்யியலாளர் (இ. 1997)
  • 1925 – எம். பி. ஸ்ரீனிவாசன், தென்னிந்திய இசை அமைப்பாளர் (இ. 1988)
  • 1937 – சரோஜா வைத்தியநாதன், பரதநாட்டியக் கலைஞர்
  • 1965 – சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீராங்கனை
  • 1976 – இஷா கோப்பிகர், இந்தியத் திரைப்பட நடிகை
  • 1980 – மேக்னா நாயுடு, இந்தியத் திரைப்பட நடிகை
  • 1984 – காவ்யா மாதவன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4