யாழ்ப்பாணம் - குருநகரில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது!

#SriLanka #Jaffna #Arrest #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
10 months ago
யாழ்ப்பாணம் - குருநகரில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து 120 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4