தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு

#SriLanka #Kilinochchi #Market #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
9 months ago
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பிரதேச சபைத்தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கப்டன் இசையரசனின் தந்தையான வேலாயுதம் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். 

images/content-image/1758897014.jpg

மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் அணிவித்தார். 

images/content-image/1758897002.jpg

மலர் அஞ்சலியினை வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆரம்பித்து வைத்தார்.

 மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது சிறப்புரையினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நிகழ்த்தினார்.

கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், நேற்று முன்தினம் ஐநாவில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கா அவர்கள் கடந்த கொடிய யுத்தத்தின் போது எமது உறவுகள் ஒருவேளை உணவு கூட கிடைக்க முடியாமல் இருந்த வேளையில் பல தாய்மார்கள் தந்தையர்கள் சிறுவர்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச அப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். 

அன்றைய காலத்தில் முக்கிய பதவியை வகித்த அனுரகுமார திசாநாயக்க, அப்பொழுது நமது சகோதர உறவுகளுக்காக சிந்தாதகண்ணீரை தற்பொழுது காசாவில் இடம்பெறுகின்ற யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தனதுகவலை தெரிவிக்கின்றார். 

அப்படி இறக்க மனங்களை கொன்றவராக இருந்தால் ஏன் எமது உறவுகள் செத்து மடிந்த போது தனது அனுதாபங்களையும் எந்தவித ஆதங்கள்களையே தெறிக்க தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

images/content-image/1758897036.jpg

 குறித்த நிகழ்வில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உபதவிசாளர்கள் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வர்த்தக சங்கத்தின் நிர்வாகத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg





இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4