உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த முல்லைத்தீவு மாணவர் உயிரிழப்பு!

#SriLanka #Death #Student #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
9 months ago
உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த முல்லைத்தீவு மாணவர் உயிரிழப்பு!


உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த முல்லைத்தீவு மாணவர் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, கர்சிலமடுவைச் சேர்ந்த பரமேஸ்வரன் பானுசன் என்ற மாணவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக மாற்று சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (2025.09.29) அவர் உயிரிழந்தது முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

images/content-image/1759229088.jpg

குறித்த மாணவர் 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

குடும்பத்தில் ஒரே குழந்தையாக இருந்த இந்த மாணவரின் மறைவு முல்லைத்தீவு மாவட்ட மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4