இரண்டு ரிப்பர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

#SriLanka #Accident #Kilinochchi #Lanka4
Mayoorikka
9 months ago
இரண்டு ரிப்பர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் உள்ள புகையிரத கடவைக்கு அண்மித்து இரண்டு ரிப்பர் வாகனங்கள் எதிர் எதிர் திசையில் மோதி விபத்துக்குள்ளாயுள்ளது.

 விபத்தில் சிக்குண்ட ரிப்பர் வாகனம் புகையிரத பாதையில் தடம்புரண்ட நிலையில் Jcb இயந்திரம் மூலம் டிப்பர் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

 யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த டிப்பர் வாகனமும் கிளிநொச்சியிலிருந்து பயணித்த டிப்பர் வாகனமும் இவ்வாறு எதிர் எதிர் திசையில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

images/content-image/1759462002.jpg

 யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற போது அதனை டிப்பர் வாகனம் முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றது. ரிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4