யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முதியவர்கள் படுகாயம்!

#SriLanka #Jaffna #Accident #Lanka4
Mayoorikka
9 months ago
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முதியவர்கள் படுகாயம்!

பலாலி வீதி புன்னாலைக்கட்டு பகுதியில் இன்று (05) இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். 

 இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்த போது, இராணுவ வாகனத்தின் பின்னால் வந்த லொறி ஒன்று இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை பலாலி பக்கம் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது குறித்த லொறி மோதியது.

 இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு முதியவர்களே படுகாயமடைந்துள்ளனர். விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4