கடலில் மிதந்து வந்த 839 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள்!

#SriLanka #drugs #Lanka4
Mayoorikka
9 months ago
கடலில்  மிதந்து வந்த  839 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள்!

தெற்கு கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 51 பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 இதன்படி குறித்த பொதிகளில் 'ஐஸ்' (Crystal Methamphetamine), ஹஷிஷ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் காணப்பட்டதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த போதைப்பொருள் தொகுதி 'உணக்குருவே சாந்தா' என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 கடற்படையினரின் கூற்றுப்படி, 3 பொதிகளில் ஹெரோயின் போதைப்பொருள் இருக்கலாம் எனவும், மிகுதி 48 பொதிகளில் 'ஐஸ்' போதைப்பொருள் (Crystal Methamphetamine) இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4