அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விநியோகம் - 25 மில்லியன் அபராதம் வசூல்!
#SriLanka
#water
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் 25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான 6 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து இந்த அபராதங்கள் வசூலிக்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அந்த காலகட்டத்தில், நாடு முழுவதும் 306 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டிருந்தன.
அதன்படி, எதிர்காலத்தில் இந்த சோதனைகள் தொடரும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
