போதை பொருள் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவருவோம் - ஜனாதிபதி

#SriLanka #AnuraKumaraDissanayake #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
9 months ago
போதை பொருள் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவருவோம் - ஜனாதிபதி

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழித்து, போதைக்கு அடிமையானவர்களைப் பரந்த மக்கள் பங்கேற்புடன் புனர்வாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்ட “ரட்டம எகட – Ratama Ekata – National Operation) எனும் அவசர துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, ஜனாதிபதி அனுரகுமாரவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசிய இலக்கை அடைவதற்காகவே “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதன் கீழ், பரந்த தகவல் பிரசாரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல். போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முடக்குதல்.

போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளை பலப்படுத்துதல். அடிமைத்தனத்திலிருந்து மீள விரும்பும் தனிநபர்களுக்கு ஆதரவளித்தல்.

பரந்துபட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த தேசிய நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4