தீபாவளிக்கு மறுநாள் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

#SriLanka #Lanka4 #School Student #leave
Mayoorikka
9 months ago
தீபாவளிக்கு மறுநாள்  தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை மத்திய மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.

 இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். 

 இதேவேளை, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை, தீபாவளியை முன்னிட்டு கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு மறு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இதனை கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து இன்று (17) வெளியிடப்பட்ட கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி பதில் பாடசாலை எதிர்வரும் சனிக்கிழமை இடம் பெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4