வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 18 (October 18)

#people #history #Lanka4 #World
Prasu
8 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 18 (October 18)

அக்டோபர் 18 (October 18) கிரிகோரியன் ஆண்டின் 291 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 292 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார்.
  • 1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது.
  • 1016 – அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான்.
  • 1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர்.
  • 1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது.
  • 1565 – சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் சப்பானின் மத்சூரா கடற்படையினர் போர்த்துக்கீசரின் வணிகக் கப்பல்களைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.
  • 1648 – அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை பாஸ்டன் செம்மார்கள் ஆரம்பித்தனர்.
  • 1679 – கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் இராபர்ட் நொக்சு அங்கிருந்து தப்பி மன்னார் அரிப்பு என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்.[1]
  • 1748 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1860 – இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்த்து.
  • 1867 – உருசியப் பேரரசிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
  • 1898 – ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவை எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
  • 1912 – முதலாம் பால்கான் போர்: செர்பிய மன்னர் முதலாம் பீட்டர் தனது நாடு போரில் இறங்குகிறது என செர்பிய மக்களுக்கு அறிவித்தார்.
  • 1921 – சோவியத் ஒன்றியத்தில் கிரிமிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது.
  • 1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
  • 1944 – சோவியத் ஒன்றியம் செக்கோசிலோவாக்கியாவை முற்றுகையிட்டு நாட்சி ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றியது.
  • 1945 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார்.
  • 1946 – இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இரவுத் தொடருந்து அனுராதபுரத்திற்கு அருகாமையில் இரத்மலை என்ற இடத்தில் தடம் புரண்டதில் நால்வர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.[2]
  • 1954 – அமெரிக்காவின் டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.
  • 1963 – பெலிசேட் விண்வெளிக்கு சென்ற முதலாவது பூனை என்ற பெயரைப் பெற்றது.
  • 1967 – சோவியத் விண்கலம் வெனேரா 4 வெள்ளிக் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
  • 1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.
  • 1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.
  • 2004 – சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.
  • 2006 – ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.
  • 2007 – கராச்சியில் முன்னாள் பாக்கித்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர், 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பூட்டோ காயமெதுவுமின்றி தப்பினார்.
  • 2011 – ஐந்தாண்டுகள் அமாசின் கைதியாக இருந்த இசுரேலிய இராணுவ வீரர் கிலாத் சாலித் விடுவிக்கப்பட்டார்.

பிறப்புகள்

  • 1130 – சூ சி, சீன மெய்யியலாளர் (இ. 1200)
  • 1859 – என்றி பெர்குசன், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1941)
  • 1882 – பல்லடம் சஞ்சீவ ராவ், தமிழக புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)
  • 1910 – வி. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 2006)
  • 1915 – மகாதேவன் சதாசிவம், இலங்கைத் துடுபாட்ட வீரர் (இ. 1977)
  • 1925 – நா. த. திவாரி, இந்திய அரசியல்வாதி (இ. 2018)
  • 1950 – ஓம் பூரி, இந்திய நடிகர் (இ. 2017)
  • 1952 – ரோய் டயஸ், இலங்கைத் துடுப்பாளர்
  • 1956 – மார்ட்டினா நவரத்திலோவா, செக்-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
  • 1960 – ஜான் குளோட் வான் டாம், பெல்சிய நடிகர்
  • 1965 – சாகிர் நாயக், இந்திய இசுலாமிய மதகுரு
  • 1973 – ஜேம்ஸ் ஃபோலி, அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2014)
  • 1974 – அமீஷ் திரிபாதி, இந்திய நூலாசிரியர்
  • 1978 – ஜோதிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
  • 1978 – செந்தில் குமார், தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், ஊடகவியலாளர்
  • 1984 – பிரீடா பின்டோ, இந்திய நடிகை
  • 1987 – சாக் எப்ரான், அமெரிக்க நடிகர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4