உகண்டாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் 63 பேர் உயிரிழப்பு!
#Accident
#world_news
Mayoorikka
1 month ago
மேற்கு உகண்டாவில் உள்ள கம்பாலா-குலு நெடுஞ்சாலையில், எதிரெதிர் திசைகளில் சென்ற இரண்டு பேருந்துகள், லாரி மற்றும் கார் என பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 63 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இரண்டு பேருந்துகள் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் சில வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தன.

(வீடியோ இங்கே )
அனுசரணை
