வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 23 (October 23)

#people #history #Lanka4 #World
Prasu
7 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 23 (October 23)

அக்டோபர் 23 (October 23) கிரிகோரியன் ஆண்டின் 296 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 297 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 69 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • கிமு 42 – உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான்.
  • 425 – மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.
  • 1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான்.
  • 1295 – இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன.
  • 1694 – வில்லியம் பிப்சு தலைமையிலான பிரித்தானிய/அமெரிக்க குடியேற்றப் படையினர் கியூபெக்கை பிரான்சிடம் இருந்து கைப்பற்றத் தவறினர்.
  • 1707 – பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.
  • 1739 – பிரித்தானியப் பிரதமர் ராபர்ட் வால்போல் எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.
  • 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெசுட்போர்ட் சமரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை மிசோரி வெசுட்போர்ட் சமரில் தோற்கடித்தன.
  • 1870 – பிரான்சின் மெட்சு என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் புருசியா வெற்றியடைந்தது.
  • 1906 – அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிசு நகரில் ஐரோப்பாவின் முதலாவது வானூர்தியைப் பறக்க விட்டார்.
  • 1911 – முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.
  • 1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் குமனோவோ என்ற இடத்தில் போர் ஆரம்பமானது.
  • 1915 – நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 1917 – லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
  • 1929 – 1929 வால் வீதி வீழ்ச்சி. பங்குச்சந்தை விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியது.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோவை நாட்சி செருமனி கைப்பற்றுவதைத் தடுக்கும் பொருட்டு சோவியத் இராணுவத் தளபதி கியோர்கி சூக்கொவ் செஞ்சேனைக்குத் தலைமை ஏற்றார்.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: இரண்டாம் அல்-அலமைன் சண்டை: வடக்கு எகிப்தில், பிரித்தானியாவின் எட்டாவது இராணுப் படைகள் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையில் எகிப்தில் இருந்து அச்சு இராணுவத்தினரை வெளியேற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
  • 1942 – அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்து 12 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.
  • 1946 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.
  • 1955 – பிரதமர் நியோ டின் டியெம் முன்னாள் பேரரசர் பாவோ டையை பொது வாக்கெடுப்பில் தோற்கடித்து தென் வியட்நாமை அமைத்தார்.
  • 1956 – அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அங்கேரியப் புரட்சி நவம்பர் 4-இல் நசுக்கப்பட்டது.
  • 1958 – நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர்.
  • 1966 – ஐக்கிய நாடுகள் அவை மைய மண்டபத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.
  • 1983 – லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1989 – கம்யூனிச அங்கேரிய மக்கள் குடியரசு கலைக்கப்பட்டு அங்கேரியக் குடியரசு நிறுவப்பட்டது.
  • 1991 – கம்போடிய வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
  • 1991 – ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1993 – பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசுப் படை குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
  • 1998 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஆகியோருக்கிடையில் "அமைதிக்காக நிலம்" என்ற உடன்பாடு எட்டப்பட்டது.
  • 2001 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரியக் குடியரசுப் படை ஆயுதக் களைவில் ஈடுபட்டது.
  • 2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.
  • 2002 – மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
  • 2004 – வடக்கு சப்பானில் நீகாட்டாவில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 2,200 பேர் காயமடைந்தனர்.
  • 2006 – இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • 2011 – துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் உயிரிழந்தனர்.
  • 2015 – பற்றீசியா சூறாவளி மெக்சிக்கோவைத் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

  • 1491 – லொயோலா இஞ்ஞாசி, கத்தோலிக்கப் போதகர் (இ. 1556)
  • 1844 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (இ. 1923)
  • 1873 – வில்லியம் டி. கூலிட்ச், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1975)
  • 1875 – கில்பர்ட் நியூட்டன் லூயிசு, அமெரிக்க வேதியியலாளர் (இ. 1946)
  • 1894 – எம்மா வுசோத்சுகி, அமெரிக்க வானியலாளர் (இ. 1975)
  • 1900 – வலேரியன் கிராசியாஸ், கத்தோலிக்க திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால் (இ. 1978)
  • 1905 – அ. சீனிவாச ராகவன், தமிழக எழுத்தாளர் (இ. 1975)
  • 1920 – புச்சியித்தா தெத்துசுயா, சப்பானிய-அமெரிக்க அறிவியலாளர் (இ. 1998)
  • 1923 – பைரோன் சிங் செகாவத், இந்திய அரசியல்வாதி (இ. 2010)
  • 1929 – சம்சுர் ரகுமான், வங்காளதேசக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 2006)
  • 1939 – க. வி. விக்னேஸ்வரன், இலங்கை நீதிபதி, 1வது வட மாகாண முதலமைச்சர்
  • 1940 – பெலே, பிரேசில் கால்பந்து வீரர்
  • 1942 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க இயக்குநர் (இ. 2008)
  • 1948 – எம். எச். எம். அஷ்ரப், இலங்கை அரசியல்வாதி (இ. 2000)
  • 1954 – ஆங் லீ, தாய்வான்-அமெரிக்க இயக்குநர்
  • 1960 – ராண்டி பௌஷ், அமெரிக்க எழுத்தாளர், கணினி அறிவியலாளர் (இ. 2008)
  • 1974 – அரவிந்த் அடிகா, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர்
  • 1976 – ரையன் ரெனால்ட்சு, கனடிய-அமெரிக்க நடிகர்
  • 1979– பிரபாஸ், தெலுங்குத் திரைப்பட நடிகர்
  • 1989 – ஜொனிதா காந்தி, இந்தோ-கனடியப் பாடகி

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4