யாழில் ஐஸ் போதைப்பொருட்களுடன் சிக்கிய இளைஞர்கள்: இலஞ்சம் கொடுக்க முயன்ற முயற்சி தோல்வி

#SriLanka #Jaffna #Arrest
Mayoorikka
8 months ago
யாழில் ஐஸ் போதைப்பொருட்களுடன் சிக்கிய இளைஞர்கள்: இலஞ்சம் கொடுக்க முயன்ற முயற்சி தோல்வி

யாழில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 

 ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 குறித்த சந்தேகநபர் தமிழ் தேசியம் சார்ந்த கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவரது மகன் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 20 இலட்சம் ரூபா பணத்தினை புலனாய்வு பிரிவினருக்கு இலஞ்சமாக வழங்க முற்பட்ட வேளை புலனாய்வு பிரிவினர் அதனை வாங்க மறுத்து கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4