போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசை திருப்பப்படாது! ஜனாதிபதி உறுதி

#SriLanka
Mayoorikka
7 months ago
போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசை திருப்பப்படாது! ஜனாதிபதி உறுதி

போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசை திருப்பப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளால் அதைத் தடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 தங்காலையில் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்புச் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்துரைத்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

 அத்துடன் மிகவும் சவாலான இந்த வேலையைத் தொடருமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் முழு ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும் என்று உறுதியளித்தார். நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த "முழு நாடுமே ஒன்றாக" தேசிய முன்முயற்சி, ஜனாதிபதியின் அனுசரணையில் தங்காலை பொது மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 9 மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் பரவல் மற்றும் கடத்தலை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறது. இதில் குறிப்பாக நாட்டின் இளைஞர்களைப் பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4