கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்!

#SriLanka
Mayoorikka
7 months ago
கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்!

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK - 434 அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

 நேற்று (20) இரவு இந்த அவசரத் தரையிறக்கம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

 விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே இந்தத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 அதன்பின், அந்தப் பயணி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான இந்த A380 வகை விமானம் நேற்று இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் மீண்டும் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4