வங்கதேச நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
#Death
#people
#Earthquake
#Bangladesh
#Rescue
Prasu
3 weeks ago
நேற்று வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஆரம்பத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர் எனவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )