வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 24 (November 24)

#people #history #Lanka4 #World
Prasu
6 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 24 (November 24)

நவம்பர் 24 (November 24) கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 380 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார்.
  • 1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1359 – முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார்.
  • 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். 1642 – ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாசுமேனியா எனப் பெயர் பெற்றது.
  • 1750 – மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி ராவை நீக்க மறுத்தமைக்காகக் கைது செய்தார்.
  • 1859 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.
  • 1865 – இலங்கையில் கொழும்பு, கண்டி மாநகரசபைகள் அமைக்கப்பட்டன.[1]
  • 1914 – முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
  • 1917 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1922 – துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டர்சு உட்பட ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
  • 1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: தோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானப் படை வடக்கு மரியானா தீவுகளில் இருந்து குண்டுகளை வீசின.
  • 1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடியை சுட்டுக் கொன்ற லீ ஆர்வி ஆசுவால்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
  • 1965 – யோசப் மொபுட்டு கொங்கோவின் அரசுத்தலைவர் பதவியை கைப்பற்றினார். இவர் நாட்டின் பெயரை சயீர் என மாற்றி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
  • 1966 – செக்கோசிலோவாக்கியாவில் பிராத்திஸ்லாவா நகரில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் உயிரிழந்தனர்.
  • 1969 – சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
  • 1971 – வாசிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் வான்குடையுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
  • 1973 – எண்ணெய் நெருக்கடியை அடுத்து செருமனியில் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இது அடுத்த நான்கு மாதங்களுக்கு அமுலில் இருந்தது.
  • 1976 – துருக்கியின் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
  • 1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
  • 2002 – ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் தில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
  • 2006 – சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
  • 2012 – டாக்கா நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்.
  • 2015 – உருசியாவின் சுகோய் சு-24 போர் விமானம் சிரியா-துருக்கிய எல்லையில் துருக்கிய வான்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் வானோடி ஒருவர் கொல்லப்பட்டார்.
  • 2016 – கொலம்பியா அரசும் கொலம்பியா மக்கள் இராணுவமும் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. நாட்டின் 50-ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
  • 2017 – பிர் அல்-அபெட் தாக்குதல்: எகிப்தில் பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவாடா பள்ளிவாசலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1632 – பரூக் இசுப்பினோசா, இடச்சு மெய்யியலாளர் (இ. 1677)
  • 1784 – சக்கரி தைலர், அமெரிக்காவின் 12வது அரசுத்தலைவர் (இ. 1850)
  • 1888 – டேல் கார்னெகி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1955)
  • 1914 – அபுல் அஸன் அலி அஸனி நத்வி, இந்திய இசுலாமிய அறிஞர் (இ. 1999)
  • 1918 – கிருஷ்ண சைதன்யா, மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர் (இ. 1994)
  • 1924 – தத்தினேனி பிரகாஷ் ராவ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1992)
  • 1934 – கரோலின் கர்லெசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1987)
  • 1939 – எஸ். ஏ. ஐ. மத்தியு, இலங்கைத் தமிழ்ப் பன்னூலாசிரியர் (இ. 2016)
  • 1943 – மான்டெக் சிங் அலுவாலியா, இந்தியப் பொருளியலாளர், ஆட்சிப் பணி அதிகாரி
  • 1955 – இயன் போத்தம், ஆங்கிலேயத் துடுப்பாளர்
  • 1961 – அருந்ததி ராய், இந்திய எழுத்தாளர்
  • 1968 – அனுர குமார திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி
  • 1969 – ருமேஸ் களுவித்தாரன, இலங்கைத் துடுப்பாளர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4