வடக்கு கிழக்கில் இன்னமும் மீள்குடியேற்றம் முழுமைபெறவில்லை!

#SriLanka
Mayoorikka
7 months ago
வடக்கு கிழக்கில் இன்னமும் மீள்குடியேற்றம் முழுமைபெறவில்லை!

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைபெறவில்லை என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

 நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

 அத்துடன், பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு பாதீட்டில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளின் உட்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றத்துக்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

 இதற்கமைய அடுத்தாண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4