இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
#India
#PrimeMinister
#Israel
#Visit
#Netanyahu
#cancelled
Prasu
2 weeks ago
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு பாதுகாப்பு காரணமாக பயணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. நெதன்யாகு இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நெதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3வது முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் 9ம் திகதி இந்தியா வருவதாக இருந்தது.
ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் 1ம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால் இந்திய பயணத்தை ரத்து செய்தார். அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.
(வீடியோ இங்கே )