சிவப்பு எச்சரிக்கை: நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலை

#SriLanka #weather
Mayoorikka
7 months ago
சிவப்பு எச்சரிக்கை: நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலை

அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டிருந்தது.

 இது அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும்.

 வடக்கு , கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். 

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கமாக விருத்தியடைய இருப்பதால் இன்று முதல் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

 நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

 நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4