சீரற்ற வானிலை: அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கவும்!
#SriLanka
Mayoorikka
3 weeks ago
சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
