விமானநிலையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

#SriLanka
Mayoorikka
7 months ago
விமானநிலையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக விமானநிலையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண நிலவரத்தை சரிபார்த்துக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

 இல்லையெனில்,

 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை 

அல்லது +94 117 77 1979 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறுமாறும் ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது. 

 இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. 

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் மத்தள, இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4