பாரிய வெள்ளத்தில் தத்தளிக்கும் கிளிநொச்சி மாவட்டம்: பெருமளவான குடும்பங்கள் இடப்பெயர்வு

#SriLanka
Mayoorikka
7 months ago
பாரிய வெள்ளத்தில் தத்தளிக்கும் கிளிநொச்சி மாவட்டம்: பெருமளவான குடும்பங்கள் இடப்பெயர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

 அத்துடன் பல வீதிகளின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊடாக வட்டக்கச்சி செல்லும் கண்டி வீதி இரணமடு குளத்தின் மேல் அதிக நீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 

 அதேபோன்று ஏ 35 பரந்தன் முல்லை தீவுக்கான பிரதான வீதி கண்டவளை பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பாலத்தில் வெள்ள நீர் வீதியின் குறுக்கே ஓடுவதன் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சிக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1764425155.jpg

 அத்துடன் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மற்றும் கடல் படையினர் கண்டாவளை பிரதேச செயலர் இணைந்து பெரியகுளம் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் அவர்களை ஏற்றி அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது நேரடியாக வெள்ள பாதிப்புகளை 2500 க்கும் மேற்பட்டவர்கள் எதிர்நோக்கியுள்ளனர் அத்துடன் பெருமளவானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 

அத்துடன் இவர்களுக்கான சமைத்த உணவை வழங்கும் நடவடிக்கைகள் பிரதேச செயலங்கள் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4