சோலர் செயற்பாட்டைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
#SriLanka
Mayoorikka
3 weeks ago
இலங்கை மின்சார சபையால் அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக வெளியிடப்பட்ட விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய பேரழிவு காலத்தில் தேசிய மின்சார முறைமையின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்த செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் பொருட்டு,மின்சார தேவை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதனை முன்னிட்டு, வீடுகளின் மேல்மாடிகளில் நிறுவப்பட்ட சூரிய பலகை (Solar Panel) உரிமையாளர்கள், இன்று (30) பிற்பகல் 3.00 மணிவரை தங்களது சூரிய பலகைகளின் செயற்பாடுகளை தன்னிச்சையாக தவிர்த்து கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
அனைத்து மின்சார நுகர்வோருக்கும் தொடர்ச்சியான மற்றும் பாதுகாப்பான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் பணி தொடர்பாக உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் மிகுந்த மதிப்புடன் பாராட்டுகிறோம்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
