புரட்டிப்போட்ட 'டித்வா' : இதுவரை உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு

#SriLanka
Mayoorikka
3 weeks ago
புரட்டிப்போட்ட 'டித்வா' : இதுவரை உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்துள்ளன. 

 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

 குறித்த அறிக்கையின் படி, சீரற்ற வானிலை காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 193 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அனர்த்தங்களில் சிக்கி 228 பேர் காணாமல் போயுள்ளனர். 

 அதேபோல், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,68,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக நாடு முழுவதும் 1,094 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவற்றில், 41,005 குடும்பங்களைச் சேர்ந்த 1,47,931 பேர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் முப்படையினர் மற்றும் அதிகாரிகளால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!