நடிகர் கார்த்தியின் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
#TamilCinema
#Banned
#Movie
#HighCourt
Prasu
2 weeks ago
மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 12ம் திகதி வெளியாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தன்னிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி பணத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )