படிப்படியாக நிலைப்பெற்று வரும் வடகிழக்கு பருவமழை - பலத்த மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
7 months ago
படிப்படியாக நிலைப்பெற்று வரும் வடகிழக்கு பருவமழை - பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

இதற்கமைய இன்று (07.12) வடக்கு, வடமத்திய, கிழக்கு ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

 நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4