ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

#SriLanka
Mayoorikka
7 months ago
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 குறித்த பூகம்பம் 7.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. கடற்கரையில் வசிக்கும் மக்களை உடனடியாக உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 வடக்கு ஜப்பானின் கடற்கரையில் திங்கட்கிழமை ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ஹொக்கைடோ கடற்கரையில், கடலோர நகரமான அமோரிக்கு அருகில், 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 கடல் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் (சுமார் 30 மைல்) ஆழத்தில் அதன் மையம் இருந்தது. அப்பகுதியில் 3 மீட்டர் (10 அடி வரை) வரை சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4