கைதான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை!

#SriLanka
Mayoorikka
7 months ago
கைதான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை!

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

 பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

 விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் 24ம் திகதிக்கு வழக்கை தவணையிட்டு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4