மன ஆரோக்கியத்தை மேம்படுத்த கைக்கொடுக்கும் பழக்கவழக்கங்கள்!

#SriLanka #Health #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 week ago
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த கைக்கொடுக்கும் பழக்கவழக்கங்கள்!

வாழ்க்கையை சிறப்பாக வாழ உடல் ஆரோக்கியத்தை போலவே மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது அவசியம். அந்தவகையில் இந்த பதிவில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பார்க்கலாம். 

அந்தவகையில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆன்மீகப் பழக்க வழக்கங்களை வளர்ப்பது, நம்முடைய தேவையற்ற பழக்கங்களை கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, அத்துடன் நம் வாழ்வின் நோக்கத்தை கண்டறிவது போன்ற வழிமுறைகள் கைக்கொடுக்கும். 

மனம் அமைதிபெற தியானம், எளியவர்களுக்கு சேவை செய்வது, பிறருடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வது வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் அளிக்கும்.

 வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறிய, நம்மை ஊக்குவிக்கும் அபிலாஷைகளையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். நம்முடைய நிர்பந்தங்கள் மற்றும் விருப்பு வெறுப்புகளை அடையாளம் கண்டுகொண்டு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வாழத் தொடங்குவது அவசியம்.

 சுயக்கட்டுப்பாடுடன் வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்தால் அதுவொரு சுகமான பயணமாக அமையும். குறிப்பாக கடந்த காலத்தை, அது துன்பம் நிறைந்ததாக இருப்பின் மறப்பதும், அந்த நினைவுகளில் இருந்து வெளிவருவதும் நம்மை சிறந்த வாழ்க்கைக்கு முன்னோக்கி முன்னேறிச்செல்ல வழி நடத்த உதவும்.

 வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், நம்மைத் தடுக்கும் சூழ்நிலைகளில் கூட, சுயமாக முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வது முக்கியம். 

கவலை மற்றும் பயம் நம்மை செயலற்றவர்களாக மாற்றும். எனவே இவற்றை அடையாளம் கண்டு ஒதுக்கிவிட்டு செயல்பட தொடங்குவது அவசியம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!