AI தொழில்நுட்பத்தின் வருகை - பணியிழப்பு அதிகரிப்பு!
AI சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அதன் பட்டியில் வருமாறு,
1) இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்தாண்டு 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
2)மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தனது 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
3) தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் (Verizon) 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
4) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏஐ மீது முதலீடு செய்வதால் செலவுகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. குறிப்பாக இதில் பலர் சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் ஆவர்.
5) ஐ.டி. கம்பெனியான அக்சென்சர் (Accenture) ஏஐக்கு தங்களை தகவமைத்து கொண்டிராத 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
6) இந்தியாவை சேர்ந்த ஐ.டி. சேவை நிறுவனமான டி.சி.எஸ் (TCS) 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஓராண்டில் நடந்த மிகவும் அதிக பணிநீக்கம் ஆகும்.
7) எலக்ரானிக் உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் (Panasonic) 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.
8) எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமான செவ்ரான் (Chevron) 8,000 முதல் 10,000 ஊழியர்களை நீக்கியது.
9) அழகுசாதனப் பொருட்கள்நிறுவனமான எஸ்டீ லாடர் (Estee Lauder) விற்பனைச் சரிவைச் சமாளிக்க 7,000ஊழியர்களை நீக்கியது.
10) தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிஃபோனிக்கா (Telefonica) 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. செலவுக் குறைப்பு மற்றும் செயல்திறனை அதிகரித்தல், ஏஐக்கு தகவமைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களையே பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கங்களுக்கு மேற்கோள் காட்டி உள்ளன.
இவை தவிர்த்து பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான பணிநீக்கங்களை இந்தாண்டு மேற்கொண்டுள்ளன.
டிசிஎஸ், மைக்ரோசாப்ட், அசென்சர், அமேசான் போன்ற நிறுவனங்களின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களும் இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஏஐ மென்மேலும் வளர்ந்து வருவதால் இந்த பணிநீக்க போக்கு அடுத்தாண்டும் இன்னும் கூடுதலாக தொடரும் என்றே தொழிலுட்ப வட்டாரங்கள் கணிக்கின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
