கனடாவில் குடியுரிமை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

#Canada #government #Law #citizenship
Prasu
6 months ago
கனடாவில் குடியுரிமை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது.

இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ’Lost Canadians’ என்றே அழைக்கப்படுகிறார்கள். இந்நிலையில், Bill C-3 என அழைக்கப்படும், 2025ஆம் ஆண்டுக்கான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு, மன்னர் சார்லஸ், சமீபத்தில் ஒப்புதலளித்தார். 

அதைத் தொடர்ந்து, நேற்று, அதாவது, 2025ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 15ம் திகதி, ’குடியுரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டம்’ என்னும் அந்த மசோதா, சட்டமாக மாறியுள்ளது.

இந்த சட்டம் நிறைவேறியுள்ளதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் பிறந்த கனேடிய குடிமக்களுக்கு வெளிநாட்டில் பிறந்த அல்லது அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது தத்தெடுத்த பிள்ளைகளுக்கும் கனேடிய குடியுரிமை கிடைக்கும் என்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது கனேடிய குடியுரிமை பெறத் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4