நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தவருக்கு திருமணமா? பாரிஸ் நாட்டில் சுவாரஷ்யமான சம்பவம்

#France #wedding #Governor #Law
Prasu
3 hours ago
நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தவருக்கு திருமணமா? பாரிஸ் நாட்டில் சுவாரஷ்யமான சம்பவம்

பிரான்சின் செய்ன்-எ-மார்ன் (Seine-et-Marne) பகுதியில் உள்ள செஸ்ஸி Chessy நகர முதல்வருக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையே நடந்த மோதல் தற்போது அங்கு பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது.

Chessy நகர சபையில் ஒரு காதல் ஜோடி திருமணத்திற்காக விண்ணப்பித்திருந்தது. அதில் மணப்பெண் ஐரோப்பியர், ஆனால் மணமகன் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவு (OQTF) பெற்ற ஒரு வெளிநாட்டவர்.

இதைக் கண்ட Chessy நகர முதல்வரும் அவரது துணை அதிகாரிகளும், "சட்டப்படி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய ஒருவருக்கு நாங்கள் எப்படி திருமணம் செய்து வைப்பது? இது சட்டவிரோத குடியேற்றத்திற்கான போலித் திருமணமாக இருக்கலாம்" என்று சந்தேகித்து திருமணத்தை நடத்தி வைக்க மறுத்தனர்.

இது தொடர்பாக நிர்வாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் (Prosecutor) விசாரணையில் இறங்கினார். ஆனால் விசாரணையின் முடிவில் இரண்டு திருப்பங்கள் காத்திருந்தன: 

அந்த ஜோடியின் காதல் உண்மையானது என்பதற்கான பல ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மணமகன் மீது இருந்த 'நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்ற உத்தரவு (OQTF) தற்போது காலாவதியாகிவிட்டது, அது செல்லுபடியாகாது. 

images/content-image/1765997385.jpg

இதனையடுத்து, கடந்த டிசம்பர் 10-ம் திகதி, "உடனடியாக திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்" என்று நீதிமன்றம் நகர முதல்வருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மனமில்லாத நகர முதல்வரும் அவரது துணை அதிகாரிகளும், "எங்களால் இதைச் செய்ய முடியாது" எனக் கூறி ஒட்டுமொத்தமாகத் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர். ஆனால் இன்று (டிசம்பர் 17), மாவட்ட நிர்வாகம் (Préfecture) ஒரு அதிரடி முடிவை அறிவித்தது: 

"உங்கள் இராஜினாமாவை ஏற்க முடியாது. நீங்கள் பதவியில் தொடர வேண்டும்" என்று அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரண்ட் நூனேஸ் (Laurent Nunez), "சட்டப்படி வெளியேற வேண்டிய பட்டியலில் இருந்த ஒருவருக்குத் திருமணம் செய்து வைப்பது அதிர்ச்சியளிக்கக்கூடியதுதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை மதித்துச் செயல்படுவது அவசியம்" என்று தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், பிடிக்கிறதோ இல்லையோ, அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு செஸ்ஸி நகர முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்! 

சிவா சின்னப்பொடி. 

பாரிஸ்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!