பிரான்சின் முன்னாள் மயக்க மருந்து நிபுணருக்கு ஆயுள் தண்டனை

#Arrest #France #Murder #doctor #Vaccine
Prasu
5 months ago
பிரான்சின் முன்னாள் மயக்க மருந்து நிபுணருக்கு ஆயுள் தண்டனை

பிரான்ஸில் 30 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்தமைக்காக முன்னாள் மயக்க மருந்து நிபுணர் ஒருவருக்கு ஆயுள் தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.

பெசன்சோன் நகர நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஃபிரடெரிக் பெச்சியர் என அடையாளம் காணப்பட்ட மருத்துவர், மாரடைப்பு அல்லது இரத்தப்போக்கை ஏற்படுத்தும் விஷ ஊசிகளை பயன்படுத்தி நோயாளிகளை கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெச்சியர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பெச்சியரை ‘தொடர் கொலையாளி’ மற்றும் ‘பிரெஞ்சு சட்ட வரலாற்றில் மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒருவர்’ என்று வழக்கறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4